ஆறு வயது மகனுக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்படும் அளவிற்கு அந்த சிறுவனை சித்ரவதை செய்து வந்ததாக நம்பப்படும் தந்தைக்கும், வளர்ப்புத் தாயாருக்கும் கோலபிலா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
27 வயது தந்தை முஹம்மது ஐசத் சோல்கேப்லி மற்றும் 31 வயது வளர்ப்புத் தாயார் சிதி நோர்ஷகினா முகமது நூர் ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சித்தி இஸ்மாயில் இத்தண்டனையை விதித்தார்.
அவ்விருவரும் கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நெகிரி செம்பிலான், பகாவ், ஜம்பூ லாபான் என்ற பொது குடியிருப்புப்பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவ்விரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


