கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
பொது போக்குவரத்து நிலையங்களில் பேறு குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்கு தொண்டூழிய போலீஸ்காரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
பொது போக்குவரத்து நிலையங்களில் நடப்பதற்குச் சிரமப்படும் அல்லது நடமாட முடியாத மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு உதவும் வகையில் உதவி போலீஸ்காரர்களுக்கு பறிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இதற்கான ஏற்பாட்டை எல்ஆர்டி ரயில் மற்றும் பேருந்து சேவையை வழங்கி வரும் பிரசாரானா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.
எனினும் எம்ஆர்டி ரயில் நிலையங்களில் இப்பிரச்னை தலைத்தூக்குவது மிகக் குறைவு. காரணம், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் அதற்கான வசதிகள் முழுமையாக இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








