அலோர் ஸ்டார், அக்டோபர்.16-
சமூக வலைத்தளங்களில் இளையோர்களையும், மாணவர்களையும் எளிதில் வசப்படுத்தக்கூடிய ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்களைக் கொண்ட பதிவுகளைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி அகற்ற வேண்டும் என்று கெடா மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனூசி நோர் கேட்டுக் கொண்டார்.
தற்போது இது போன்ற உள்ளடக்கங்கள் அதிகமான இளையோர்கள் வழிதவறிச் செல்வதற்கு வழிவகுக்கின்றன. இளம் பிராயத்திலேயே அவர்கள் தவறான வழிகளுக்குச் செல்லாமல் இருக்க இத்தகைய உள்ளடக்கங்களை எம்சிஎம்சி கட்டுப்படுத்த வேண்டும் என்று சனூசி வலியுறுத்தினார்.








