Mar 17, 2026
Thisaigal NewsYouTube
சிறப்புப்பணிக்குழு ஓர் ஆலோசனை மன்றம் போல செயல்படும்
தற்போதைய செய்திகள்

சிறப்புப்பணிக்குழு ஓர் ஆலோசனை மன்றம் போல செயல்படும்

Share:

இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ரா, ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் மாற்றப்பட்டப் பின்னர் அதன் சிறப்புப்பணிக்குழு, மித்ரா தொடர்பாக ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு ஓர் ஆலோசனை மன்றத்தைப் போல் செயல்படும். இதில் ஒற்றுமைத்துறை அமைச்சு மிகத் தெளிவாக இருப்பதாக அதன் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி விளக்கினார்.

மித்ராவின் செயல்பாட்டை எவ்வாறு மேம்படுத்துவது, சமூகத்தின் எதிர்பார்ப்பு என்ன? இன்னும் எந்தெந்த வழிகளில் சமூகத்திற்கு உதவ முடியும் என்பதை மித்ரா நிர்வாகத்திற்கு இந்த சிறப்புப்பணிக்குழு ஆலோசனைகளை பரிந்துரைக்கும். இவ்விவரத்தை அந்த சிறப்புப்பணிக்குழுவின் தலைவர் P. பிரபாகரனிடம் அண்மையில் தாங்கள் தெளிவுபடுத்தியிருப்பதாக சரஸ்வதி கந்தசாமி குறிப்பிட்டார்.

மித்ரா சிறப்புப்பணிக்குழுவின் பணித்தன்மை மற்றும் அதன் செயலாக்கம் எவ்வாறு அமைந்திட வேண்டும், அதன் கடமைகள் யாவை என்பது தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய விதிமுறைகள் குறித்து ஒற்றுமைத்துறை அமைச்சின் கொள்கைப் பிரிவு தற்போது வரைந்து வருவதையும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி சுட்டிக்காட்டினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு