கோலாலம்பூர், ஜனவரி.03-
இன்று சனிக்கிழமை காலை நிலவரப்படி, பகாங், சரவாக் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது.
பகாங் மாநிலம் ரவூப் மாவட்டத்தில், 17 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் SK Ulu Atok மையத்தில் உள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில சமூக நலத்துறையான ஜேகேஎம் தெரிவித்துள்ளது.
மேலும், பகாங் மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் நீர் மட்டமானத்ஹ் இன்னும் அபாயகரமான நிலையை எட்டவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில், சரவாக் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி, 342 குடும்பங்களைச் சேர்ந்த 1343 பேர், தங்களது வீடுகளிலிருந்து நிவாரண மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.








