பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “Anwar: The Untold Story”. திரைப்படத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி கல்வி அமைச்சின் அனைத்து இலாகாக்களின் அதிகாரிகளுக்கும், மாநில கல்விப் பொறுப்பாளர்களுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதைக் கல்வி அமைச்சு இன்று மறுத்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடெக் கை மேற்கோள்காட்டி கல்வி தலைமை இயக்குநர் பிகாருதீன் கசாலி சுற்றறிக்கையின் வாயிலாக இப்படியொரு உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று கூறப்படுவதை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த கடிதம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை அல்ல என்றும் அந்த கடிதத்தின் உண்மைத் தன்மையை ஆராயும்படியும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
பிரதமர் அன்வாரின் வாழ்க்கை சரிவுகளையும், ஏற்றங்களையும் சித்தரிக்கும் “Anwar: The Untold Story” திரைப்படம் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதற்கு கல்வி அமைச்சுப் பணியாளர்கள் அந்தப் படத்தை கட்டாயமாக பார்க்க வேண்டும் என்பதுடன் ஆசிரியர்களும், மாணவர்களும் அந்த திரைப்படத்தை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி ஓர் உத்தரவிடப்பட்டு .இருப்தைப் போல் அந்த கடிதத்தின் ள்ளடக்கம் சித்தரிக்கப்பட்டு இருந்தது..

தற்போதைய செய்திகள்
“Anwar: The Untold Story” திரைப்படத்தை பார்க்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதா? கல்வி அமைச்சு மறுப்பு
Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


