May 22, 2026
Thisaigal NewsYouTube
இதுவரையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

இதுவரையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Share:

ஈப்போ, ஜுன் 28-

ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தானில் மலேசிய சுகாதார அமைச்சின் பயிற்சி மையத்திற்கு அருகில் ஆடவர் ஒருவரின் கைமணிக்கட்டு துண்டிக்கப்பட்ட சண்டையில் இதுவரையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிதீன் அபாங் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த சண்டை தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தேடல் நடவடிக்கையில் ஈப்போ உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அனைவரும் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளதாக ஏசிபி அபாங் ஜைனல் தெரிவித்தார்.

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் தங்களின் இடங்களை ஒதுக்கிக்கொள்வதில் இரு கும்பல்களுக்கு இடையில் இச்சண்டை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Related News