Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மாணவர்களுக்கு 6 மடிக்கணினிகள் அன்பளிப்பு
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு 6 மடிக்கணினிகள் அன்பளிப்பு

Share:

கூலாய், - பரதநாட்டியம் மற்றும் சிலம்பம் நடனத்திற்காக கின்னஸ் உலக சாதனையில் தங்கள் பெயரைப் பதிவு செய்த 6 இந்திய மாணவர்களுக்கு கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் மடிக்கணினிகளை எடுத்து வழங்கினார்.

கூலாய் கல்வி மையம் மற்றும் ஜொகூர் கல்வி சமூகநல ஆய்வு அறவாரியமான EWRF ஏற்பாடு செய்த 'கின்னஸ் உலக சாதனையாளர் பாராட்டு' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தியோ நீ சிங் , EWRF-விற்கு 5 ஆயிரம் வெள்ளி நன்கொடையையும் வழங்கி சிறப்பித்தார்.

அடுத்த வரும் ஐந்து ஆண்டுகளில் மேலும் ஐந்து கல்வி மையக் கிளைகளைத் திறக்க திட்டமிட்டலுள்ள EWRF-இன் முயற்சியை தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சருமான தியோ நீ சிங் வரவேற்றார். கூலாய் மக்களின் கல்வித் தரம் மற்றும் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் முயற்சியில் EWRF-உடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட5 ஆயிரம் வெள்ளி 0 நன்கொடையானது கல்வி மையத்தின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் முழுமையாகப் பயன்படுத்தப்படலாம், அதோடு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் அவர்களின் கற்றல், கற்பித்தலை எளிதாக்கும் என்று தியோ நம்பிக்கை தெரிவித்தார்.

'கின்னஸ் உலக சாதனையாளர் பாராட்டு' நிகழ்ச்சியில் EWRF தலைவர், A. கோவிந்தசாமி மற்றும் ஜொகூர் பாரு EWRF தலைவர், S. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News