May 21, 2026
Thisaigal NewsYouTube
காரில் விடப்பட்ட குழந்தை இறப்பு : தாயார் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

காரில் விடப்பட்ட குழந்தை இறப்பு : தாயார் மீது குற்றச்சாட்டு

Share:

இரண்டு வயது எண் குழந்தையை காரிலேயே மறந்து விட்டு விட்டதால், மூச்சுத் திணறி அந்தக் குழந்தை இறந்த விவகாரத்தில், அக்குழந்தையின் தாயார் மீது செஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த மாதம் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக குறத்தை மறுத்துள்ளார் அக்குழந்தையின் தாயாரான 38 வயது நுர் சரி ஃபர்டியான முஹமாட் அம்ரான்.

நீதிபதி டாக்டர் ஷாலிசா வர்னோ முன்னிலையில் வாசிக்கப்பட்டக் குற்றச்சாட்டுக்குப் பிறகு, நூர் சரி ஃபர்டியானா அவ்வாறு கூறினார்.

அவ்வழக்கு விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 15 ஆயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிக்க துணை பப்ளிக் பிராசிக்கியூட்டர் அனிஸ் ஹக்கிமா இப்ராஹிம் பரிந்துரைத்தார்.

ஆனால், அந்த ஜாமின் மதிப்பை குறைக்க குற்றஞ்சாட்டப்பட்ட நுர் சரி ஃபர்டியானாக்காக ஆஜராகிய வழக்கறிஞர் டத்தோ ஹனிஃப் ஹாஸ்ஸான் பரிசீலனை செய்யக் கோரினார். அந்தச் சம்பவத்தால், குற்றப்ஹ்சாட்டப்பட்டவர் கடந்த ஒரு மாத காலமாக அதிர்ச்சியில் இருக்கிறார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் செவிமெடுத்த பின்னர், 7 ஆயிரம் வெள்ளி ஜாமினில் குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்ட நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், அருமில் உள்ள காவல் நிலையத்தில் அவர் ஆஜராகி, தமது வருகையை அங்கு உறுதி படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த மாதம் 30 ஆம் தேதி, இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி