Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு ஜார்ஜ் டவுன் சமூக நல இயக்கத்தின்  RM4 மில்லியன் கல்வி உபகாரச் சம்பளம்:  500 மலேசியர்களுக்கு EMBA பயில அரிய வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

பினாங்கு ஜார்ஜ் டவுன் சமூக நல இயக்கத்தின் RM4 மில்லியன் கல்வி உபகாரச் சம்பளம்: 500 மலேசியர்களுக்கு EMBA பயில அரிய வாய்ப்பு

Share:

மலேசியாவில் பணிபுரியும் தொழில்முறை வல்லுநர்களின் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கில், பினாங்கு ஜார்ஜ் டவுன் சமூக நல இயக்கம் மற்றும் மைண்ட்ஃபுல்னஸ் அகாடமி இணைந்து மொத்தம் 4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கல்வி உபகாரச் சம்பத் திட்டத்தை அறிவித்துள்ளன.

ஓர் கல்விமானான டாக்டர் ஆர். சிவபிரகாஷ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 'Executive MBA அல்லது EMBA' எனும் இந்த உயர்நிலை நிர்வாகப் படிப்பைத் தொடர விரும்புவோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு தலா 8 ஆயிரம் ரிங்கிட் உபகாரச் சம்பளமாக வழங்கப்படும்.

EMBA படிப்பின் மொத்தக் கட்டணம் 10 ஆயிரம் ரிங்கிட்டாகும். உபகாரச் சம்பளம் போக, மாணவர்கள் தலா 2 ஆயிரம் ரிங்கிட் மட்டும் செலுத்தினால் போதுமானது.

இந்த கல்வியைப் பெறுவதற்கு மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் தங்களின் தலைமைத்துவத் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைத்து மலேசியர்களுக்கும் இது பொருந்தும்.

இது 100 விழுக்காடு அசைன்மென்ட் அடிப்படையிலான கற்றல் முறையாகும். வேலைக்குச் சென்றுகொண்டே இக்கல்வியைத் தொடர முடியும்.

இது HRDCorp அங்கீகாரம் பெற்ற ஒரு திட்டமாகும்.

நாடு தழுவிய அளவில் முதற்கட்டமாக 500 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 'முன்னதாக வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று டாக்டர் சிவபிரகாஷ் விளக்கினார்.

ஆர்வம் உள்ளவர்கள் கூகுள் படிவத்தின் வாயிலாக தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்: தொடர்புக்கு கீழ்காணும் போஸ்டரில் உள்ள எண்களுக்கு அழைக்கலாம்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை