கிள்ளான், ஜூலை 04-
நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதியும், மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான MTUC- யின் முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் வி. டேவிற்கு அடுத்து எம்.டி.யு.சி.யின் தலைமைப் பொறுப்பை 18 ஆண்டு காலம் ஏற்று, சீரிய பங்களிப்பை சைனல் ரம்பாக் வழங்கினார்.
மலேசிய தொழிற்சங்க வட்டாரத்தில் நன்கு அறிமுகமான சைனல் ரம்பாக் இன்று அதிகாலை 2 மணியளவில் சுபாங் ஜெயா, USJ- வில் உள்ள தனது இல்லத்தில் இறுதி மூச்சை விட்டதாக எம்.டி.யு.சி.யின் தலைவர் ஏபீண்டி அப்துல் கானி தெரிவித்தார்.
மலேசிய போக்குவரத்து தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான சைனல் ரம்பாக் , தமது பதவிக் காலத்தில் சிலாங்கூர், போர்ட் கிள்ளானில் உள்ள WIT ( டபிள்யூ.ஐ.டி.) எனப்படும் தொழிலாளர் தொழில்நுட்பக் கல்லூரியை நிறுவுவதில் மறைந்த தொழிற்சங்கவாதியும், அரசியல்வாதியுமான Dr. V. டேவிட்டுடன் இணைந்து முக்கியப் பங்காற்றியார் ஆவார். .
கடந்த 1986 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரையில் எம்.டி.யு.சி.யின் தலைவராக சைனல் ரம்பாக் பதவி வகித்தார்.
மூத்த தொழிற்சங்கவாதியும், தோட்டத் தொழிலாளர் சங்கமான NUPW. யின் முன்னாள் பொதுச் செயலாளருமான, தோட்டத் தொழிலாளர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் P.P. அண்ணா என்ற டாக்டர் P.P. நாராயணனுக்கு அடுத்து எம்.டி.யு.சி.யின் தலைமைப் பொறுப்பை 18 ஆண்டு காலம் ஏற்று, சீரிய பங்களிப்பை சைனல் ரம்பாக் வழங்கினார்.
மலேசிய தொழிலாளர்களின் உரிமைக்காக போராடியதற்காக கடந்த 1997 ஆம் ஆண்டு மே முதல் தேதி, தொழிலாளர் தினத்தன்று, சைனல் ரம்பாக் - கிற்கு மலேசிய தொழிலாளர்களின் தந்தை எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தொழிலாளர் பிள்ளைகள் பிள்ளைகள், தொழிலாளர் வர்க்கமாகவே இருந்து விடக்கூடாது. அவர்கள், தொழில் பயிற்சி பெற்று, தொழில்நுட்பத்துறையில் சிறந்த விளங்க வேண்டும் என்ற தூர நோக்கு சிந்தனையில் எம்.டி.யு.சி. சார்பில் தொழிலாளர் தொழில்நுட்பக் கல்லூரியை சைனல் ரம்பாக் நிறுவியதில் போர்ட் கிள்ளானில் இன்னமும் சாட்.சியாக விளங்குகிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் இரண்டு தவணைக்காலம் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்த சைனல் ரம்பாக், ILO ( ஐ.எல்.ஓ.) எனப்படும் அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் இயக்குநராகவும் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








