கோலாலம்பூர், செப்டம்பர்.10-
சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று வெளியிடப்பட்ட தகவலை மலேசிய தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்தத் தகவல் பொய்யானதாகும் என்று எஸ்பிஆர் பொதுச் செயலாளர் கைருல் ஷாரி இட்ரிஸ் தெரிவித்தார்.
சபா சட்டமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.








