ஷா ஆலாம்,ஜன.22நாடு முழுவதும் உள்ள P-hailing மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அனைவருக்கும் பிரத்தியேக கட்டண கழிவுக்கான சிறப்பு இணைய Pakej கட்டண முறையை அரசாங்கம் நாளை செவ்வாய்க்கிழமை அறிவிக்கவிருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் e- hailing ஓட்டுநர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களுக்கான சிறப்பு கட்டண முறையை அறிமுகப்படுத்தும் நோக்கில் இது தொடர்பாக அனைத்து தொடர்புத்துறை நிறுவனங்களிடமும் அமைச்சு பேச்சு நடத்தியுள்ளதாக Fahmi Fadzil குறிப்பிட்டுள்ளார்.
e- hailing மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு நாளை செவ்வாய்க்கிழமை நல்ல செய்தி காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








