சிகமாட், ஜூலை.29-
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ஜோகூர், சிகமாட், புக்கிட் சிபூட், ஜாலான் பிரான்சிஸ் கூ என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் கருகி மாண்ட 5 வீடுகள் சம்பந்தப்பட்ட தீ சம்பவத்தில் சதிநாச வேலை நிகழ்ந்து இருக்கக்கூடும் என்பதற்கானச் சாத்தியத்தை போலீசார் மறுக்கவில்லை.
இந்தத் தீ சம்பவத்திற்குப் பின்னணியில் சதிநாச வேலை நடந்துள்ளது என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று சிகமாட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஸம்ரி மரின்சா தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் 73 வயது மூதாட்டி தப்பிக்க இயலாமல், தீ ஜுவாலைக்குள் சிக்கி மாண்டார். இது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








