பட்டர்வெர்த், அக்டோபர்.11-
கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் சூட்கேசில் அடைக்கப்பட்டு சடலமாகக் கிடந்த 31 வயது லீ பூன் ஹான் என்ற ஆடவருக்குச் சொந்தமானதாக நம்பப்படும் டொயோட்டா வியோஸ் காரை நேற்று இரவு போலீசார் மீட்டுள்ளனர்.
அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்ட அம்பாங் ஜாஜார் பகுதியிலிருந்து சுமார் 450 மீட்டர் தூரத்தில், அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள இப்புதிய தடயத்தின் மூலம், இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவரை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் பினாங்கு காவல்துறை தெரிவித்துள்ளது.
அதே வேளையில் அருகிலுள்ள குப்பை மாற்று நிலையத்தின் சிசிடிவி பதிவுகளும் போலீசாரால் பெறப்பட்டுள்ளன. அவை விசாரணைக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








