Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மலேசியக் கல்வி முறையைச் சீர்திருத்துவதற்கான மூன்று அவசர முன்னுரிமைகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியக் கல்வி முறையைச் சீர்திருத்துவதற்கான மூன்று அவசர முன்னுரிமைகள்

கோலாலம்பூர், ஜூன்.18-

மலேசியக் கல்வி முறையைச் சீர்திருத்துவதற்கான மூன்று அவசர முன்னுரிமைகளை முன்மொழிந்துள்ள ஒரு கல்விமானாகிய டாக்டர் R. சிவ பிரகாஷ், நேற்று முதலாவது முன்னிரிமையை முன்வைத்துள்ள வேளையில் இன்று இரண்டாவது முன்னுரிமையைப் பரிந்துரைத்துள்ளார்.

இரண்டாவது முன்னுரிமையானது, கல்வி மற்றும் TVET எனப்படும் தொழில்நுட்பக்கல்வி, தொழிற்பயிற்சி ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுடன், அவற்றுக்கு மறுபெயரிடப்பட வேண்டும் என்று டாக்டர் சிவ பிரகாஷ் வலியுறுத்துகிறார்.

நடப்பு பிரச்சினை என்ன?

TVET கல்வி நிர்வகிப்பு நிர்வாகமானது, துண்டு துண்டாக உடைந்து, 12 அமைச்சுகளில் சிக்கிக் கிடக்கின்றன. ஒரே தன்மையிலான பணியை மற்ற அமைச்சுகளும் செயல்படுத்துவதால் அவற்றுக்கு இடையில் நிர்வகிப்பு மோதல்கள் ஏற்படுகின்றன. இது தரத்தைக் குறைமதிப்புக்கு இட்டுச் செல்லும் அதே வேளையில் மாணவர்கள் பங்கேற்பைத் தடுப்பதற்கான சமூகவியல் களங்கத்தை ஏற்படுத்துகிறது டாக்டர் சிவ பிரகாஷ் சுட்டிக் காட்டுகிறார்.

இதற்கானச் சான்றுகளை ஆராய்வோமானால்,மலேசிய உயர்கு கல்வி அமைச்சின் 2024 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, பல்வேறு நிறுவனங்களின் கீழ் 662 TVET கல்விக் கழகங்கள் செயல்படுகின்றன.

உலக வங்கியின் 2023 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஒருங்கிணைந்த சான்றிதழ் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை அது வலியுறுத்துகிறது.

இந்நிலையில் சீர்திருத்தங்களுக்கு முன் வைக்கப்படும் பரிந்துரைகள் யாவை?

ஒரே சீராக செயல்படுதல் மற்றும் தர உத்தரவாதத்தை உறுதிச் செய்வதற்கு ஒரு தேசிய TVET வாரியத்தை நிறுவ வேண்டும்.

“TVET முதல் தேர்வு” எனும் தேசியப் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.

TVET திட்டங்களில் WBL எனப்படும் வேலை சார்ந்த கற்றல் முறை மற்றும் முதலாளிகளின் ஆதரவைப் பெறுவதற்கான செயல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று டாக்டர் சிவ பிரகாஷ் வலியுறுத்துகிறார்.

இதனால் எதிர்பார்க்கப்படும் தாக்கம் என்ன?

பட்டதாரிகளின் வேலை வாய்ப்பை மேம்படுத்து முடியும். திறன் சார்ந்த திட்டங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.

பயிற்சி மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையே மேலும் நெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்று இரண்டாவது முன்னுரிமையை டாக்டர் சிவ பிரகாஷ் பரிந்துரைக்கிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →