கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
இந்தியர்களின் சமூகவியல் உருமாற்றுப் பிரிவான மித்ரா நிதியைப் பகிர்ந்து அளிக்கும் விவகாரத்தை அமைச்சரவை வரை கொண்டு சென்று விவாதித்து நல்ல முறையில் தீர்வு கண்டு இருக்கும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங்கிற்கு ஜெலுத்தோங் எம்.பி ஆர்எஸ்என் ராயர் மக்களவையில் இன்று நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்விவகாரத்தில் அமைச்சர் கோபிந்த் சிங், அமைச்சரவைக்குக் கொண்டுச் சென்றதன் விளைவாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மக்களவையில் மித்ரா குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நல்லதொரு அறிவிப்பைச் செய்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை இந்திய சமுதாயமும் நல்ல முறையில் ஏற்றுக் கொண்டுள்ளது என்று ஆர்எஸ்என் ராயர் தெரிவித்தார்.
அதே வேளையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கும், சுங்கை பூலோ எம்.பி.யும், துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஆர். ரமணனுக்கும் ஆர்எஸ்என் ராயர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.








