கோத்தா பாரு, ஜனவரி.13-
தனது முன்னாள் மனைவியின் அரை நிர்வாணப் படத்தை டிக் டாக்கில் பதிவேற்றம் செய்து, பகிர்ந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூவாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
மாஜிஸ்திரேட் வான் முஹமட் இஸாய் வான் அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்ட 28 வயது முஹமட் அஸிம் ஒத்மான் என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் அபராதம் விதித்தது.
சம்பந்தப்பட்ட நபரின் செயல், இஸ்லாத்தின் போதனைக்கு எதிரானதாகும் என்று மாஜிஸ்திரேட் தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார். சம்பந்தப்பட்ட நபர் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இரவு பெங்காலான் செப்பாவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








