Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வயது குறைந்தப் பெண் கடத்தல், எழுவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வயது குறைந்தப் பெண் கடத்தல், எழுவர் கைது

கிள்ளான், நவ. 26-


கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சிலாங்கூர், கோலக்கிள்ளான், தாமான் கேமில் வயது குறைந்த பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட பதின்ம வயதுடைய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ஷா ஆலாம், செக்‌ஷன் 7, ஐ – சிட்டி மற்றும் பங்சார் மிட்வேலி மெகாமால் ஆகியவற்றில் அந்த ஏழு சந்தேகப்பேர்வழிகளும் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் சா ஹுங் ஃபோங் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த அன்று மாலை 4 மணியளவில் வெளியே சென்று வருவதாக கூறி சென்ற தங்களது 15 வயது மகள் வீடு திரும்பவில்லை என்று சம்பந்தப்பட்ட பெற்றோர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை தேடும் பணி தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →