Oct 16, 2026
Thisaigal NewsYouTube

லோரியில் மோதி, தொழிற்சாலை ஊழியர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோரியில் மோதி, தொழிற்சாலை ஊழியர் பலி

ஷா ஆலாம், டிச. 19-


மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிற்சாலை ஊழியர் ஒருவர், லோரியில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 6.30 மணியளவில் ஷா ஆலாம், பெர்சியாரான் மொக்தார் டஹாரி சாலையில் ஓர் எண்ணெய் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்தது.

இதில் கடுங்காயங்களுக்கு ஆளாகிய 33 வயதுடைய அந்த தொழிற்சாலை ஊழியர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் நிலைய துணைத் தலைவர் ராம்சே அனாக் எம்போய் தெரிவித்தார்.

விளம்பரப் பலகையைப் பொறுத்துவதற்கு லோரி ஒன்று சாலையோரமாக நிறுத்தப்பட்டு இருந்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார் சைக்கிளோட்டி, அந்த லோரி மீது மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →