Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஐந்து நிலையங்களை நிர்மாணிக்கத்திட்டம்
தற்போதைய செய்திகள்

மேலும் ஐந்து நிலையங்களை நிர்மாணிக்கத்திட்டம்

Share:

கோலாலம்பூர்,ஜன.9
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி, சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் பெட்டாலிங் ஜெயா, பன்டார் உத்தாமா- விற்கும், கிள்ளான், ஜொஹான் செத்தியா- விற்கும் இடையிலான LRT3 ரயில் சேவையில் ரத்து செய்யப்பட்ட ஐந்து ரயில் நிலையங்கள் மீண்டும் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

ட்ரோப்பிக்கானா,ராஜா மூடா,தெமாஷா, புக்கிட் ராஜா,பன்டார் பொத்தானிக் ஆகியவையே விடுப்பட்ட போன 5 எல்.ஆர்.டி. ரயில் நிலையங்களாகும். 47 கோடி வெள்ளி செலவில் அந்த ஐந்து நிலையங்களும் மீண்டும் கட்டப்படுவதற்கு 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதியை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார். இதன் கட்டுமானப்பணி 2027 ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பண்டார் உத்தாமாவிற்கும், கிள்ளானுக்கும் இடையிலான எல்.ஆர்.டி.3 ரயில் சேவைத்திட்டம் 1,600 கோடி வெள்ளியை உள்ளடக்கியதாகும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்