மாணவன் ஒருவனை பள்ளிக்கு அனுப்புவதற்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாணை செய்யத் தொடங்கியுள்ளனர்.
பி.கே.பி. உத்தரவு காலத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் நாசி கஞ்சாவை வாங்குவதற்கு கோலாலம்பூரிருந்து ஈப்போவிற்கு ஹெலிகாப்படர் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல ஷா ஆலாமில் உள்ள ஒரு காலி நிலப்பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் பள்ளி சீருடை அ ணிந்திருந்த மாணவன் ஒருவன் இறங்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ஒரு வீடமைப்புப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து மலேசிய வான்போக்குவரத்து இலாகாவிடம் போலீசார் புகார் அளிப்பர் என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த மாணவன் ஹெலிகாப்படரில் இறங்கிய சம்பவத்தை அப்பகுதியில் வசித்த குடியிருப்புவாசி ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஹெலிகாப்படரில் இறங்கிய அந்த மாணவன் பின்னர் அருகில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அந்த மாணவனை ஹெலிகாப்படர் தரையிறக்குவது இது இரண்டாவது முறையாகும் என்ற பெயர் குறிப்பிட விரும்பாத குடியிருப்பு வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


