Feb 11, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்: பிரதமர் அன்வார் உறுதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.11-

சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.

நிதி அமைச்சருமான அன்வார், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், இந்த விவகாரத்தில் அரசாங்கம் பின்வாங்காது என்றும் உறுதியளித்தார்.

இதனைத் தடுப்பதற்குத் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி தேவை. இருப்பினும், சட்டவிரோதச் சூதாட்ட நடத்துனர்கள் வெளிநாடுகளில் தளம் அமைத்திருக்கக்கூடும் என்பதால் இது எளிதான காரியமாக இருக்காது. அவர்கள் மிகவும் சிக்கலான வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளைச் சமாளிக்க வலிமையான அமலாக்க நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. நாட்டின் சட்டங்களுக்கு முரணான செயல்கள் குறித்துப் பொதுமக்களிடையே பொறுப்புணர்வு மற்றும் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான அவயைத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் வருவாய் கசிவைத் தடுப்பதற்கான ஒரு கூடுதல் நடவடிக்கையாக, சட்டவிரோத சூதாட்ட நடத்துனர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதா என்று புக்கிட் பிந்தாங் எம். பி. ஃபோங் குய் லுன் எழுப்பிய கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

Related News