Jul 1, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசியல் நிலநடுக்கம்: கவிழுமா மாநில அரசு?
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் அரசியல் நிலநடுக்கம்: கவிழுமா மாநில அரசு?

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த 14 பாரிசான் நேஷனல் (BN) சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணுக்கு அளித்து வந்த ஆதரவை இன்று திடீரென மீட்டுக் கொண்டனர். இதனால் மாநில அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிர்வு, மாநில அரசாங்கத்தை கவிழ்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணுக்கு அளித்து வந்த ஆதரவை பாரிசான் நேஷனலைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று மீட்டுக் கொண்டனர். இது குறித்து மாநில ஆட்சியாளரான சமஸ்தானபதி துவாங்கு முஹ்ரிஸ் அவர்களிடம் மந்திரி பெசார் விளக்கம் அளித்துள்ளார்.

தெளிவான முடிவு எட்டப்படும் வரை தற்போதைய நிர்வாகமே 'சிறுபான்மை அரசாங்கமாகத்' தொடர்ந்து செயல்படும் என்றும், தான் பதவியில் நீடிப்பேன் என்றும் அமினுடின் ஹருண் அறிவித்துள்ளார். ஆதரவை மீட்டுக் கொண்டவர்களைச் சந்திக்க தற்போது திட்டமில்லை எனத் தெரிவித்துள்ள இந்தச் சூழல், மாநில அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

தற்போது நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, மாநில அரசை ஆட்டம் காண செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை