மலாக்கா, ஜூலை.14-
தனது 5,6 வயதுடைய இரு வளர்ப்புப் பிள்ளைகளை மானபங்கம் செய்து, அவர்களை அடித்து, துன்புறுத்தி, அடைத்து வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் வளர்ப்புத் தந்தை ஒருரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மலாக்கா, செங்கில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய அந்த வளர்ப்புத் தந்தை, இன்று அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷூ யீ முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவரை ஒரு வார காலம் தடுத்து வைப்பதற்கான ஆணையைப் போலீசார் பெற்றனர்.
2001 ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்றச்செயல்கள் சட்டத்தின் கீழ் அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
அந்த நபரின் முன்னாள் மனைவி செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.








