Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பாலியல் பலாத்காரம் குறித்து புகார் செய்ய தயங்காதீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலியல் பலாத்காரம் குறித்து புகார் செய்ய தயங்காதீர்

கோலாலம்பூர், டிச.12-


பாலியல் பலாத்காரத்தற்கு ஆளாகுகின்றவர்கள் அது குறித்து புகார் செய்யவோ அல்லது மகளிர், குடும்ப மற்றும் சமூக அமைச்சில் நல்லுரை பெறுவதற்கோ ஒரு போதும் தயங்கக்கூடாது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நன்ஸி சுக்ரி கேட்டுக்கொண்டார்.

தங்களுக்கு நேர்ந்த அந்த கசப்பான சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கும் அதேவேளையில் இதுபோன்ற சம்பவத்தினால் மனவலியிலும், அழுத்தத்திலும் அவதியுற்று வருகின்றவர்களுக்கு உரிய நிவாரணமும், உரிய நல்லுரைகளும் கிடைப்பதற்கு அமைச்சில் புகார் செய்வது மிக அவசிமாகும்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது அமைச்சினால் உரிய வழிகாட்டலை வழங்க முடியும் என்பதுடன் இப்பாதிப்பிலிருந்து அவர்களால் மீள முடியும் என்று நன்ஸி சுக்ரி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →