கோல கங்சார், அக்டோபர்.29-
சைரன் ஒலியுடன் அவசரமாகச் சென்று கொண்டிருந்த அம்புலன்ஸுக்கு வழிவிடாமல், மோட்டார் சைக்கிள்களில் சாலையை அடைத்துக் கொண்டு குறுக்கீடு செய்ததாக ஐந்து மாணவர்கள், கோல கங்சார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
17 வயதுடைய அந்த ஐந்து மாணவர்களும் கடந்த அக்டேபார் 19 ஆம் தேதி பிற்பகல் 3.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 249 ஆவது கிலோமீட்டரில் கோல கங்சாருக்கு அருகில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை அல்லது கூடியபட்சம் 15 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அந்த ஐந்து மாணவர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
அந்த ஐந்து மாணவர்களும் அம்புலன்சுக்கு வழிவிடாமல் மோட்டார் சைக்கிள்களை அபாயகரமாகச் செலுத்தியதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.








