Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அரச மன்னிப்பு விவகாரத்தில் ரோஸ்மா தலையிடவில்லை
தற்போதைய செய்திகள்

அரச மன்னிப்பு விவகாரத்தில் ரோஸ்மா தலையிடவில்லை

Share:

முன்னாள் பிரதமரும், தமது கணவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட அரச மன்னிப்பு கோரும் விண்ணப்பம் தொடர்பில் தாம் சம்பந்தப்படவில்லை என்று நஜீப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் மீதான அனைத்து விவாதிப்புகளும் கலந்துரையாடல்களும் தமது மகள் நூர்யானா நஜ்வாவுடன் நஜீப் நடத்தியிருப்பதால் தற்போது 12 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அவரின் பொது மன்னிப்பு விவகாரத்தில் தமக்கு தொடர்பு இல்லை என்று ரோஸ்மா மன்சோர் விளக்கினார்.

எனினும் தமது கணவரை வெளியே கொண்டு வருவதற்கு அம்னோ உறுப்பினர்கள் காட்டி வரும் ஆர்வமும், ஆதரவும் தமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்று ரோஸ்மா குறிப்பிட்டார்.

Related News