அந்நிய நாட்டு தொழிலாளர்களைத் தமது வீட்டில் சட்ட விரோதமாக தங்க வைத்து அடைக்கலம் வழங்கி வந்ததாக அந்நியத் தொழிலாளர் தருவிப்பு நிறுவனத்தின் பெண் இயக்குநர் ஒருவர் கோலாலம்பூர், மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
33 வயதான ரீத்தா ராமுடு என்ற அந்தப் பெண்,கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி கோலாலம்பூர், கூச்சாய், என்டர்பிரேனர் பார்க், ஜாலன் கூச்சாய் மாஜூ 13, கூச்சாய் எவேனியூ வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஓர் இந்தியப் பிரஜையான முத்துமாலை ரெங்கசாமி, இந்தோனேசிய பிரஜையான மௌலிஸா ஆகியோரை தமது வீட்டில் சட்ட விரோதமாக தங்க வைத்ததாக ரீத்தா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும், தமக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து, அந்தப் பெண் இயக்குநர் விசாரணை கோரியுள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


