May 24, 2026
Thisaigal NewsYouTube
உறவினர்களை சரமாரியாக தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

உறவினர்களை சரமாரியாக தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

தெலுக் இந்தான்,ஆகஸ்ட் 08-

தனது சின்னமாளையும், தனது பாட்டியையும் சரமாரியாக தாக்கி, காயம் விளைவித்ததாக வீட்டுக் கட்டுமானக் குத்தகையாளர் ஒருவர் தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

34 வயது M.D. நவராஜன் என்ற அந்த குத்தகையாளர் மாஜிஸ்திரேட் T. அஷ்வினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

தனது சின்னமாளான 68 P. ராஜேஸ்வரியை முகத்திலேயே குத்தி, காயம் விளைவித்ததுடன் தனது 90 வயது பாட்டி R. கமலத்தை கண்ணத்திலேயே பலமுறை அறைந்து காயப்படுத்தியதாகவும் நவராஜன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

நவராஜன், கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கீழ் பேராக் மாவட்டத்தில் தெலுக் இந்தான்,தாமன் இன்த ஜெயா, ஜாலான் தேரதை J4/6 இல் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது கூடிய பட்சம் 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் நவராஜன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News