Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோழி இறைச்சியின் விலை குறையலாம் - இடைக்கால அமைச்சர்
தற்போதைய செய்திகள்

கோழி இறைச்சியின் விலை குறையலாம் - இடைக்கால அமைச்சர்

Share:

கோழிக்கறிக்கான மானியம் மீட்டுக் கொள்ளப்பட்டதோடு விலைக் கட்டுப்பாட்டை புதன்கிழமை முதல் அரசாங்கம் முற்றிலுமாக அகற்றிய பிறகும் கோழி இறைச்சியின் விலை முன்னர் நிர்ணயிக்கப்பட்டது போல ஒரு கிலோ கிராம் 9 வெள்ளி 40 காசு என்ற உச்சவரம்பு விலையை விட குறைந்த விலையில் விற்கப்படலாம் என .உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவின இடைக்கால அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமாட் தெரிவித்தார். .

நவம்பர் 1-ம் தேதி முதல் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயராது என்றும், போதுமான அளவு கோழி இறைச்சி கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்டத் தொழில்துறையினர் அரசுக்கு உறுதியளித்துள்ளனர்.

தொழில்துறையினரிடம் இருந்து உத்தரவாதம் பெற்ற போதிலும், தமது அமைச்சின் 900 அதிகாரிகள் நாளை முதல் கோழி இறைச்சியின் விலை குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் சொன்னார்.

கோழிக்கறியின் விலை ஒரு கிலோ ரிங்கிட் 9.40க்கு மேல் விற்கக் கூடாது என்று அரசு முன்பு நிர்ணயித்தது.

கோழி இறைச்சிக்கான மானியம் மீட்டுக் கொள்ளப்பட்டிருந்தாலும், A, B, C கிரேட் முட்டைகளுக்கான மானியமும் விலைக் கட்டுப்பாடும் அரசாங்கம் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Related News