Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அருள்மிகு ஶ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலய திருவிழா
தற்போதைய செய்திகள்

அருள்மிகு ஶ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலய திருவிழா

Share:

சிரம்பான், ஜூலை 08-

சிரம்பான், சுங்கை காடுட் , தாமான் தூங்கு ஜாபர் பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் ஐந்து ஆயிரம் பேர் கலந்து கொண்டு திருவிழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

காலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளுக்கு பிறகு ஆலயத்தின் அருகிலுள்ள ஆற்றாங்கரையிலிருந்து பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி, ஆலயத்தை நோக்கி வந்து அபிஷேகம் செய்தனர்..

மாலையில் ஆலய நித்திய பூஜைக்கு பிறகு பஞ்சமூர்த்திகள் இரத ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது. விநாயகர், முருகன், சோமஸ்கந்தர், பெரியநாயகி அம்மன் மற்றும் சண்டேஸ்வரர் என ஐந்து தேர்கள் ஊர்வலகமாக பவனி வந்து மக்களுக்கு அருள்காட்சி தந்தன.

இரவு 7.30 மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஐந்து தேர்களும் தாமான் தூங்கு ஜாபர், /Phase 3, / தாமான் ஸ்ரீ சேனாவாங் ,/தாமான் தூங்கு அம்புவான் நாஜிஹாஹ் , / தாமான் தூங்கு ஜாபர் Phase 2 ஆகிய பகுதிகளில் வலம் வந்தன.

அர்ச்சனை செய்வதற்கும், / ஐந்து இரதங்களும் நின்று, பக்தர்களுக்கு அருள்காட்சி தருவதற்கும் / ஏதுவாக மொத்தம் 7 கூடாரங்கள் அமைக்கப்பட்டு, நேர்த்தியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன..

தாமான் தூங்கு ஜாபர் Phase 2 பகுதியில் வள்ளியப்பன் லிங்கேஸ்வரன் ஏற்பாட்டில் கூடாரம் அமைக்கப்பட்டு, தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு நடத்தப்பட்டது இரத ஊரவலத்திற்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

பஞ்சமூர்த்திகள் இரதங்களின் முன்புறம் சிலம்பக்கலையில் ஒரு பகுதி வீர விளையாட்டான தீப்பந்தம் சுழற்றுதல், நெருப்பை கக்குதல் போன்றவை பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இதேபோன்று தமிழர்களின் இதர பாரம்பரிய கலைகளான உரிமை மேள வாத்திய இசையுடன் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும் கரகாட்டம் நிகழ்விற்கு மேலும் மெருகூட்டியது.

இதர நான்கு இடங்களில் சூரியா தலைமையில் கூடாங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பான முறையில் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தன.

கொட்டும் மழையிலும் சுமார் ஆயிரம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பஞ்சமூர்த்திகள் இரதங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

இரவு 11.45 மணியளவில் ஐந்து இரதங்களும் திரும்பி, ஆலய வளாகத்தை வந்தடைந்தன. ஆஷ்ட தச பூஜைக்கு பின்னர் நேற்றைய தின விழா ஒரு நிறைவுக்கு வந்தது. ஆலயத்தின் அனைத்து பூஜைகளும் ஆலய தலைவரின் நெறியாற்றலின் வழி ஆலய நிர்வாக சபையினரால் முறைப்படுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்