ஜோகூர் பாரு, செப்டம்பர்.12-
ஜோகூரில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இரண்டு மருத்துவர்கள், போலியான பார்சல் மற்றும் முதலீட்டு மோசடிகளில் சிக்கி 2.8 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், ஜோகூரில் 20 வயதான பெண் மருத்துவருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பில், அவர் பெயரில் பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும், அதில் சட்டவிரோதப் பொருட்கள் இருப்பதாகவும் கூறி மிரட்டிய மர்ம நபரிடம் சிக்கி, 150,000 ரிங்கிட்டை அவர் இழந்துள்ளார்.
அதே போல் நடந்த மற்றொரு மோசடி சம்பவத்தில், 45 வயதான மருத்துவரிடம் வெளிநாட்டு முதலீட்டு திட்டம் என்று பெயரில் செய்யப்பட்ட மோசடியில், 2.6 மில்லியன் ரிங்கிட்டை அவர் இழந்துள்ளதாக ஜோகூர் காவல் துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.








