பெரிக்காத்தான் நேஷனல் தலைமையில் பாஸ் கட்சியினால் ஆட்சி செய்யப்பட்டு வரும் 4 மாநில அரசாங்கங்களின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, எஸ்ஜி 4 எனப்படும் ஸ்தேட் -கவர்மென் 4" என்ற அமைப்பின் ஆலோசகர் என்ற முறையில் நேற்று இரவு கெடா மாநில அரசு தலைவர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார்.
கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நூரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மந்திரி புசார் என்ற முறையில் முகமட் சனூசி மற்றும் கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எஸ்ஜி4 தலைமைத்துவத்தின் கீழ் மாநில அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாடு குறித்து துன் மகாதீர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
திரெங்கானு மாநிலத்திற்கு அடுத்து எஸ்ஜி4 கூட்டமைப்பின் கீழ் துன் மகாதீர் விளக்கம் அளித்த இரண்டாவது மாநிலமாக கெடா விளங்குகிறது.








