Oct 18, 2025
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் 'கொத்தடிமைகளாக' நடத்தப்பட்டு வந்த 49 இந்தோனேசிய பெண்கள் மீட்பு!
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் 'கொத்தடிமைகளாக' நடத்தப்பட்டு வந்த 49 இந்தோனேசிய பெண்கள் மீட்பு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.18-

கிள்ளான் பள்ளத்தாக்கில், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 49 பெண்கள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 10 முதல் 13-ஆம் தேதி வரையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், அப்பெண்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் தெரிவித்துள்ளார்.

அப்பெண்கள் அனைவரும் ஊதியம் எதுவும் இன்றி, வீட்டுப் பணியாளர்களாக வலுக்கட்டாயமாக வேலைக்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், 27 வயது முதல் 48 வயது மதிக்கத்தக்க 14 சந்தேக நபர்களும், அக்கும்பலின் மூளையாகச் செயல்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related News