இ-ஹெய்லிங், பி-ஹெய்லிங் சேவைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் வருமானத்தையும் சமூகப் பாதுகாப்பையும் மேம்படுத்த 160 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவித் திட்டம் 2027ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு அரசாங்கமும் கிராப் (Grab) நிறுவனமும் இணைந்து நிதியளிக்கும்.
இதன் மூலம் இ-ஹெய்லிங் ஓட்டுநர்களின் நிகர வருமானம் மாதம் 227 ரிங்கிட் வரையிலும், பி-ஹெய்லிங் விநியோகத் தொழிலாளர்களின் நிகர வருமானம் மாதம் 100 ரிங்கிட் வரையிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனப் பராமரிப்புச் செலவு, காப்புறுதி மற்றும் பெர்கேசோ பங்களிப்புகளுக்கும் இந்த உதவித் திட்டம் ஆதரவளிக்கும்.
மேலும், இ-ஹெய்லிங், பி-ஹெய்லிங் தொழிலாளர்களுக்கு பெர்கேசோ பங்களிப்பில் 35 விழுக்காடு இணை மானியமும் வழங்கப்படும். தள நிறுவனங்களும் தொழிலாளர்களின் பங்களிப்பை ஏற்றுக்கொண்டால், இந்த விகிதம் 50 விழுக்காடாக உயர்த்தப்படும்.








