கடன் பெற்று தருவதாக கூறி, இரு பெண்களை நம்பவைத்து, அவர்களுடன் தகாத உறவு கொண்ட குற்றத்திற்காக சமயப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு மலாக்கா ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 12 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
அஹ்மாட் சைஃபுல்லா அப்துல் காலிட் என்ற 33 வயதுடைய அந்த நபர் 2 ஆயிரம் வெள்ளி கடன் பெற்று தருவதாக கூறி 19 மற்றும் 33 வயதுடைய இரு பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் பாலியல் வக்கிரச் செயலை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த நபர் கடந்த ஆண்டு மலாக்கா தெங்கா, புக்கிட் பாரு, ஜாலான் தெபிங் திங்கியில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.








