Jul 30, 2026
Thisaigal NewsYouTube
ஊழல் தொடர்பான வழக்கை ரத்து செய்வதில் லிம் குவான் எஞ்ஜி  தோல்வி
தற்போதைய செய்திகள்

ஊழல் தொடர்பான வழக்கை ரத்து செய்வதில் லிம் குவான் எஞ்ஜி தோல்வி

Share:

கோலாலம்பூர், ஜூலை 19-

6 பில்லியன் ரிங்கிட் மதிப்பை உட்படுத்திய பினாங்கு கடலடி பாதை மற்றும் முதன்மை சாலை நிர்மாணிப்பு திட்டத்தில் ஊழல் புரிந்ததாக, தம்மீது முன்வைக்கப்ப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுகளை ரத்து செய்வதில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எஞ்ஜி தோல்வி கண்டார்.

சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்யும்படி, குவான் எஞ்ஜி-ங்கிடமிருந்து கடந்த ஜூன் 26ஆம் தேதி பிரதிநிதித்துவ மனு பெறப்பட்டது.

இரு நாள்கள் கழித்து, அவரது மனுவை தேசிய சட்டத்துறை நிராகரித்ததாக, இன்று செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசூர அல்வி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தோக் வான் ஷஹாருதீன் வான் லடின் தெரிவித்தார்.

அதனையடுத்து, DAP-யின் பொதுச்செயலாளருமான குவான் எஞ்ஜி மீதான வழக்கு விசாரணை, ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறும் என அசூர அல்வி அறிவித்தார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு