கோலாலம்பூர், செப்டம்பர்.10-
மலாயா பல்கலைக்கழகத்தின் கணக்கியல் திட் படிப்பில், இவ்வாண்டு 85 காலி இடங்கள் உள்ளதாக உயர்க்கல்வித் துறை வெளியிட்டிருந்த புள்ளி விவரத்திற்கு எதிராக மசீச தலைவர் வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலாயா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தரவுகளை மேற்கோள் காட்டியுள்ள அவர், கடந்த 2011 மற்றும் 2024-க்கு இடையில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 200 மாணவர்கள் இப்படிப்பில் பட்டம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் பதிவுகள் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகளைக் காட்டும் போது, உயர்க்கல்வித் துறையின் தரவுகள், 85 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறுவது ஏன்? என்று இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.








