கோலாலம்பூர், செப்டம்பர்.13-
மின் அஞ்சல் வழி தாம் மிரட்டப்பட்டு வருவதாக முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி புகார் தெரிவித்துள்ளார்.
ஆடவர் ஒருவருடன் தாம் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ படம் தங்களிடம் இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருப்பதற்கு 4 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் பணத்தைக் கோரி, அடையாளம் தெரியாத நபர்கள் தம்மை மிரட்டி வருவதாக பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பணத்தை எவ்வாறு தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதற்கு அனாமதேய நபர்கள் கியூஆர் குறியீட்டையும் வழங்கியுள்ளதாக தனது முகநூலில் குறிப்பிட்டார்.
எனினும் இது உண்மையிலேயே தமக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுள்ள அவதூறாகும் என்று ரஃபிஸி தெரிவித்துள்ளார்.








