Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சென்னைக்குப் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் அவசரத் தரையிறக்கம்
தற்போதைய செய்திகள்

சென்னைக்குப் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் அவசரத் தரையிறக்கம்

Share:

கோலாலம்பூரிலிருந்து 180 பயணிகளுடன் சென்னையை நோக்கி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸுக்கு செந்தமான MH 180 விமானம், மீண்டும், கோலாலம்பூருக்கே திரும்பி, அவசரமாக தரையிறங்கியது. இச்சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்தது.

சிப்பா​ங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தி​லிரு​ந்து நேற்று இரவு 9.20 மணிக்கு புறப்பட வேண்டிய MH 180 விமானம், 25 நிமிடம் தாமதமாக 9.45 மணியள​வில் புறப்பபட்டது.

சுமார் 20 நிமிட பயணத்தில் விமானம், இந்தோனேசியா மேடான் வான் வழிப்பாதையி​ல் சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் ஓர் இயந்திரம் கோளாறு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தை கோலாலம்பூருக்கே திரு​ப்புவது என விமானி முடிவு செய்துள்ளார்.

எனினும் விமானத்தின் எரிபொருளைக் கொ​ட்டும் அதேவேளையில் ஒரு இயந்திரத்திலேயே MH 180 விமானம் செலுத்தப்பட்டு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இரவு 11.35 மணியளவில் அவசரமாக தரையிறங்கியது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 10 நிமிடம் இருக்கும் பட்சத்தில் விமானத்தின் ஒரு இயந்திரம் கோளாறு அடைந்த விவகாரத்தை பயணிகளுக்கு விமானி அறிவித்துள்ளார்.

பயணிகள் பதற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக கடைசி நேரத்தில் இந்த விவகாரத்தை விமான கேட்டன் தெரிவித்துள்ளார். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியப் பின்னர் பயணிகள் அனைவரும் விமானிகளுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

பயணிகள் அனைவரும் நேற்றிரவு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு, சென்னைப் பயணம் மறு அட்டவணையிடப்பட்டு, இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மற்றொரு ​விமானம் மூலம் பயணிகள் அனைவரும் கோலாலம்பூரி​லிருந்து சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்