பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றம் திரும்ப ஒப்படைக்கக்கூடாது என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
தம்முடைய அனைத்துலக கடப்பிதழ் எவ்வித நிபந்தனையின்றி திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அந்த முன்னாள் பிரதமர் செய்து கொண்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் லிம் வாய் கியோங் இன்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.முகைதீன் யாசினுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர் இன்னமும் 3 கிரிமினல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று லிம் வாய் கியோங் தமது எதிர்மனுவில் தெரிவித்துள்ளார்.








