கோலாலம்பூர், நவம்பர்.17-
மலாயா தலைமை நீதிபதி பதவி நிரப்பப்படும் வரை அப்பொறுப்புக்கான சிறப்புப் பணிகளை அப்பீல் நீதிமன்றத் தலைவர் டத்தோ அபு பாக்கார் ஜாயிஸ் கவனிப்பார் என்று நாட்டின் தலைமை நீதிபதி டத்தோ ஶ்ரீ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே இன்று அறிவித்துள்ளார்.
1964 ஆம் ஆண்டு நீதிபரிபாலனச் சட்டத்தின் 9 ஆவது விதிமுறையின் கீழ் கடந்த சனிக்கிழமை அப்பொறுப்புக்கு டத்தோ அபு பாக்கார் ஜாயிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மலாயா தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த 66 வயது டான் ஶ்ரீ ஹஸ்னா ஹாஷிம், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கட்டாயப் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து காலியாகியுள்ள அப்பொறுப்பை டத்தோ அபு பாக்கார் கவனித்து வருவார் என்று வான் அஹ்மாட் குறிப்பிட்டார்.








