Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

Share:

பேராக்,ஜூலை 27-

தஞ்சோங் மாலிம், Sultan Idris கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி Nur Farah Kartini- கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள Slim River போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர், நேற்று கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்துள்ளார்.

26 வயதுடைய அந்த போலீஸ்காரருக்கு எதிராக பேரா மாநில போலீஸ் தலைவர் முன்வைத்துள்ள பரிந்துரையை புக்கிட் அமான் போலீஸ் நிலையம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

Lans Koperal Muhammad Alif Monjani என்ற அந்த 26 வயது போலீஸ்காரர், தனது காதலி என்று நம்பப்படும் 25 வயது முன்னாள் பல்கலைக்கழக மாணவியை கொலை செய்து, சடலத்தை உலு பெர்ணம், SKC Kledang- கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் வீசியதாக நேற்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை