கோலாலம்பூர், அக்டோபர்.15-
வரும் பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பிரதமர் வேட்பாளரை பாஸ் கட்சி தற்போதைக்கு அறிவிக்காது என்று அதன் தலைவர் அப்துல் ஹடி அவாங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வேட்பாளரைத் தாங்கள் முன்கூட்டியே அறிவித்தால், அவரின் பாதுகாப்பு அம்சங்களில் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று தாங்கள் அஞ்சுவதாக மாராங் எம்.பி.யான ஹாடி அவாங் குறிப்பிட்டார்.
தங்களைப் பொறுத்தவரையில் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் முதன்மை கவனமாகும் என்றும் பிரதமர் வேட்பாளர் என்பது இரண்டாவது பட்சமே என்றார்.
பிரதமர் வேட்பாளரின் பெயரைத் தாங்கள் இப்போதே அறிவித்தால் அவரின் காரில் லஞ்சப்பணம், தங்கக்கட்டிகள் அல்லது போதைப்பொருள் வைக்கக்கூடும் என்று தாங்கள் அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டார்.








