Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கட்டண உயர்வை சமாளிக்க உரிய வழிகள் அறிவிக்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கட்டண உயர்வை சமாளிக்க உரிய வழிகள் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், டிச.12-


மருத்துவ காப்புறுதி பாலிசிக்கான பிரமியத் தொகை விகிதம் உயர்த்தப்படவிருக்கும் வேளையில் அதனை சமாளிப்பதற்கான வழிகள் குறித்து மத்திய வங்கியான பேங்க் நெகாரா அடுத்த வாரம் அறிவிக்கும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

பிரமியத் தொகை உயர்வினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய சுமையை குறைப்பதற்கு பிரமியத்தொகை உயர்வில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் கையாண்ட அணுகுமுறையின் கோட்பாட்டை அடிப்டையாக கொண்டு, கட்டண உயர்வை சமாளிப்பதற்கான வழிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் சுகாதார அமைச்சு, நிதி அமைச்சு, பேங்க் நெகாரா மலேசியா மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அமிர் ஹம்ஸா சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →