Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சாலையில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சாலையில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்

டிச. 11-

நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தும் மாட் ரெம்பிட் களை கட்டுப்படுத்த, 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தங்களை இறுதி செய்து வருகிறது சாலை போக்குவரத்து அமைச்சு. இதனால், அக்குற்றத்தைப் புரிகிறவர்களைக் கட்டுப்படுத்தும் என அதன் துணை அமைச்சர் Hasbi Habibollah தெரிவித்தார்.

இந்த திருத்தம், மாட் ரெம்பிட் புரியும் வேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டுதல், சட்டவிரோத பந்தயம் போன்ற ஆபத்தான செயல்களுக்கு தெளிவான வரையறையை வழங்கும். மேலும், சாலையில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என துணை அமைச்சர் விளக்கினார்.

சாலைப் போக்குவரத்துத் துறையும் காவல் துறையும் மாட் ரெம்பிட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் எனக் கூறிய Hasbi Habibollah,
இந்த முயற்சிகள் அனைத்தும் மாட் ரெம்பிட் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், மற்ற சாலை பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டவை என அவர் மேலும் சொன்னார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →