May 30, 2026
Thisaigal NewsYouTube
திவால் நிலை என்பது நிரந்தர தண்டனையாக இருக்கக்கூடாது: அஸாலினா ஒத்மான்
தற்போதைய செய்திகள்

திவால் நிலை என்பது நிரந்தர தண்டனையாக இருக்கக்கூடாது: அஸாலினா ஒத்மான்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.16-

வியாபாரத் தோல்வி, பொருளாதார நெருக்கடி அல்லது மோசடிகளால் நிதி நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு திவால் நிலை என்பது ஒரு நிரந்தர தண்டனையாகப் பார்க்கப்படக்கூடாது என்று சட்ட சீர்திருத்தத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில், இந்த ஆண்டு முதல் 'Fast Track” எனும் விரைவு வழிமுறையை அறிமுகப்படுத்தி, அரசின் 'இரண்டாவது வாய்ப்பு' கொள்கையை வலுப்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.

இந்த 'பாஸ்ட் டிராக்' திட்டத்தின் கீழ், நான்கு முக்கிய பிரிவினருக்கு திவால் நிலையிலிருந்து விரைவாக விடுதலையளிக்க முன்னுரிமை வழங்கப்படும் என்பதையும் அஸாலினா தெளிவுப்படுத்தினார்.

தனித்து வாழும் தாயார் அல்லது தந்தை, குறுங்கடன் தொழில்முனைவோர், நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் அளிக்க இந்தத் திட்டம் வரையப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு நேர்மையான தோல்வி என்பது ஆயுள் தண்டனையாக மாறிவிடக்கூடாது. தனிநபர்கள் மீண்டு வரவும், மீண்டும் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கவும், அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுக்கவும் நாம் வழிவகை செய்ய வேண்டும்," என்று இன்று நடைபெற்ற 'Fast Track” திட்டத்தின் தொடக்க விழாவில் பேசும்போது அஸாலினா குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை பொறுப்பற்ற முறையில் கடன் வாங்குவதை ஊக்குவிப்பதற்கல்ல, மாறாக உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கே என்று அவர் தெளிவுபடுத்தினார். மேலும், கடன் ஆலோசனை மற்றும் கடன் மேலாண்மை நிறுவனம் மூலம் நிதி மேலாண்மை குறித்த வழிகாட்டல்களும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

Related News

குவா மூசாங் - லோஜிங் சாலையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டிரெய்லர் லாரி: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

குவா மூசாங் - லோஜிங் சாலையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டிரெய்லர் லாரி: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

மித்ராவின் 65.5 மில்லியன் ரிங்கிட் புதிய திட்டங்கள்: மலேசிய இந்திய இளைஞர் மன்றம் வரவேற்பு

மித்ராவின் 65.5 மில்லியன் ரிங்கிட் புதிய திட்டங்கள்: மலேசிய இந்திய இளைஞர் மன்றம் வரவேற்பு

புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறை: தற்போது இயங்கும் இடங்களுக்குப் பாதிப்பில்லை என சிலாங்கூர் அரசு உறுதி

புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறை: தற்போது இயங்கும் இடங்களுக்குப் பாதிப்பில்லை என சிலாங்கூர் அரசு உறுதி

மிச்சப்படுத்தப்படும்  நிதி / மக்கள் நலத்திட்டங்களுக்குப் பாய்ச்சப்படும் பிரதமர் அன்வார் பிரகடனம்

மிச்சப்படுத்தப்படும் நிதி / மக்கள் நலத்திட்டங்களுக்குப் பாய்ச்சப்படும் பிரதமர் அன்வார் பிரகடனம்

விசாகத் தின ஊர்வலத்தில் பட்டாசு, ட்ரோன்களுக்குத் தடை: பினாங்கு போலீசார் எச்சரிக்கை

விசாகத் தின ஊர்வலத்தில் பட்டாசு, ட்ரோன்களுக்குத் தடை: பினாங்கு போலீசார் எச்சரிக்கை

வீட்டுக்குள் புகுந்த கார்: 9 வங்காளதேசத்தவர்கள் மற்றும் உள்ளூர் கடத்தல்காரர் தும்பட்டில் கைது

வீட்டுக்குள் புகுந்த கார்: 9 வங்காளதேசத்தவர்கள் மற்றும் உள்ளூர் கடத்தல்காரர் தும்பட்டில் கைது

திவால் நிலை என்பது நிரந்தர தண்டனையாக இருக்கக்கூடாது: அஸால... | Thisaigal News