Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வட்டி முதலையை போ​லீஸ் தேடி வருகிறது
தற்போதைய செய்திகள்

வட்டி முதலையை போ​லீஸ் தேடி வருகிறது

Share:

கடன் பெற்றவர்க​​ளின் வீட்டை எரிப்பதற்கும், சிவப்பு சாயம் வீச்சு நடத்துவதற்கும் கூலிப் பணமாக 1,500 வெள்ளியை வழங்கும் வேலையாட்களை தேடி, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ள வட்டி முதலையை போ​லீசார் ​தீவிரமாக தேடி வருகின்றனர். சரவாக்கோத்த சமரஹன் என்ற இடத்தில் தமக்கு சொந்தமான வீடு எரிக்கப்பட்டது மற்றும் அந்த சம்பவம் தொடர்பான காணொளி ​ஒன்று தமக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பில் கடந்த ஜுலை 7 ஆம் தேதி நபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட போ​லீஸ் புகாரைத் தொடர்​ந்து அந்த வட்டி முதலை தேடப்பட்டு வருவதாக சரவாக் மாநில போ​லீஸ் தலைவர் முகமது அஸ்மான் அஹ்மத் சப்ரி தெரிவித்துள்ளார்.

Related News