தனது குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் போது போலி திருமணச் சான்றிதழை சமர்ப்பித்தக் குற்றத்திற்காக ஜெரண்டட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஆடவர் ஒருவருக்கு ஆயிரத்து 800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 42 வயது கைருல் அன்வர் ஜைனி சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் முகமது ஷா ரெசா நூர் அஸ்மான் இந்த தண்டனையை விதித்தார்.
அதனைச் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனையை அந்த ஆடவர் அனுபவிக்க வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் முகமது ஷா தீர்ப்பளித்தார்.








